Thursday, December 23, 2010

சாரி ஸ்டாக் இல்லை !

சாரி ஸ்டாக் இல்லை !

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.


எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

--
கல்வி / அறிவு என்பது ஒரு பெரிய ஆயுதம்

Thursday, December 16, 2010

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்
2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்
3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்
4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்
5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்
6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்
7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்
8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்
9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்
10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்
11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்
12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்
13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்
14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்
15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்
17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்
18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்
19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்
20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்
21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்
22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்
23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்
24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்
25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்
26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்
.
.
1000. கேரள (தென்னக) இரயில்வே - (பெயருக்குத்தான் சென்னை தலைமையகம்.
உண்மையில் பாலக்காடு தான்

... இப்படி நீளுகிறது பட்டியல்.

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான்
கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும்
கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில்
அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய
ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை
இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

அமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால்,
முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்
யாவரும் மலையாளிகள்தான்.


இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்
நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை,
மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும்
ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி,
தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல்
உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே
மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும்
பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில்
ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள்
அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’


இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு
ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன்,
எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள்


சிந்திப்பாய் தமிழனே!!!


நன்றி: George M.Russel

Thursday, November 25, 2010

இந்திய மாநிலங்கள்....

மணிப்பூர்ராஜஸ்தான்பீகார்கேரளா
குஜராத்மத்தியபிரதேசம்

ஆந்திரபிரதேசம்
தமிழ்நாடு

நன்றி!!

Monday, November 15, 2010

என் கல்லூரி நாட்கள்....2

என் கல்லூரி நாட்கள்....2

எனது முதல் பாகம் பற்றி கவிதாவிடம் கூறினேன்,அதை படித்துவிட்டு சற்று தாழ்ந்த குரலில். இரண்டாம் பாகம் எழுத வேண்டாமே என்றாள். அதனால் விரிவாக எழுதாமல் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.

இப்போது கவிதா சென்னையில் தன் அன்பான கணவர், தன் ஒரே குழந்தை " பொன்னுமணி" எட்டாவது வகுப்பு, தானும் தன் கணவரும் தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்:-

நன்றி..

Monday, November 1, 2010

சிந்தனைகள்!!

கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு திடுக் திருப்பத்தில் நாய் ஒன்று திடீரென உங்கள் கார் மீது பாய்கிறது. ஜன்னல் கண்ணாடி ஏற்றப்பட்டு இருப்பதால், அதன் மீது முட்டி மோதிக் குரைக்கிறது. கிட்டத்தட்ட உங்களைத் தாக்கும் நெருக்கத்தில் நாய் குரைக்கும் அதிர்ச்சி உங்களைச் சற்றே நிலைகுலையச் செய்கிறது. சில நொடிகளுக்குப் பிறகு, ஜன்னல் கண்ணாடி தாண்டி அந்த நாயால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறீர்கள். ஆனாலும், அந்த நாயின் ஆக்ரோஷமான குரைப்பும் வேகமும் இன்னமும் உங்களை முழுக்க அதிர்ச்சியில் இருந்து மீளச் செய்யவில்லை. அந்தச் சூழலில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து காரைச் செலுத்தினால், சிறிது தூரம் துரத்தி ஓடி வந்து சோர்வடைந்து அந்த நாய் பின்தங்கிவிடும். மாறாக, பயத்தில் காரை நீங்கள் நிறுத்திவிட்டால், தனது முயற்சிகளுக்குக் கிடைத்த உற்சாகம் எனக் கருதி, இன்னும் ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கும் அந்த நாய்.

தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் அந்த நாயைப்போலத்தான். மிரண்டு நின்றுவிட்டால், நம் மீது ஏறி வீழ்த்தத் துடிக் கும். உதாசீனப்படுத்தி உங்கள் பாதையில் பயணிக்கத் துவங்கினால், அதுவே நீங்கிவிடும். உங்களை அலைக் கழிக்கும் பிரச்னைகளுக்கு ஆகக் குறைந்த முக்கியத்து வம் கொடுங்கள். உங்கள் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் உங்கள் எனர்ஜியின் பெரும்பகுதியினைச் செலவழியுங்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் சமயங்களில் எல்லாம், எந்தத் தடையும் தடங்கலும் இல்லாமல், உங்கள் பயணத்தில் கவனம் செலுத்துங்கள்!

நாய்கள் குரைத்துக்கொண்டு இருந்தாலும், தேர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை!

- பெர்சியப் பழமொழி

முகுந்தனின் மாமியார் எப்போதும் எதற்கும் குற்றம் குறை சொல்லியே பழகியவர். அவரைச் சந்தோ ஷப்படுத்தலாம் என்று திட்டமிட்ட முகுந்தன், மனைவியுடன் கலந்தாலோசித்து, மாமியாருக்கு ராமேஸ்வரம் துவங்கி காசி வரையிலான வழிபாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஏ.சி. ரயில், படுக்கை, சொகுசான தங்கும் இடங்கள், வசதிக் குறைவே இல்லாத பயண ஏற்பாடுகள் என்று ரொம்பவே ஆடம்பர மான பயணத் திட்டம். மாமியார் அது நாள் வரை சென்றே இருக்காத, ஆனால் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருந்த வழிபாட்டுத் தலங்கள்தான் அனைத்தும். எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தும் கடைசி நொடியில் மாமியார் 'இல்லை, எனக்குப் போகப் பிடிக்கலை!' என்று அழிச்சாட்டியமாக மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டான் முகுந்தன். இரண்டு நாட்கள் கழித்து மாமியார் தானாகவே வாய் திறந்து காரணம் சொன்னார், 'காசிக்கு டிரெயின் ஏற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக கால் டாக்ஸி வரும்னு பார்த்தா, ஆட்டோ வந்து நிக்குது. நான் என்ன அந்த அளவுக்குத் தேஞ்சு போயிட்டேனா? இங்கேயே இப்படின்னா, போற இடத்துல என்னலாம் நடக்குமோ... யாருக்குத் தெரியும். அதான் போகலைன்னு சொல்லிட்டேன்!'

இந்த இடத்தில், கால் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ ஏற்பாடு செய்ததுதான் தப்பு என்று முகுந்தன் நினைத்து மனம் குமைந்தால், அப்போது அவன் மனம் முழுவதையும் ஆற்றாமையும் எதிர்மறை எண்ணங்களும் ஆக்கிரமிக்கும். ஆசை, பாசம், காதல் கலந்து எவருக்கேனும் ஒரு பரிசு அளிக்கும்போது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை... அவ்வளவுதான்! நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அன்பைப் பரிசளித்துக்கொண்டே இருங்கள்.

ஒவ்வொருவரும் அவரவரின் மன விசாலத்துக்கு ஏற்ப தான் சந்தோஷமாக இருப்பார்கள்!

- ஆப்ரஹாம் லிங்கன்

வாரக்கணக்கில் நீளும் மராத்தான் ஓட்டப் போட்டி அது. இளைஞர்களும் அத்லெட்டுகளும் உற்சாகமாக நிற்க... வரிசையில் கடைசியாக வந்து நின்றார் அந்த 61 வயது முதியவர். அனைவரும் எகத்தாளமாகப் பார்க்க, அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. போட்டி தொடங்கியது. 10 நாட்களில் முதல் நபர் இலக்கை அடைவார் என்று அனைவரும் எதிர்பார்த்துஇருக்க... எட்டாவது நாள் மதியமே அந்த முதியவர் வெற்றிக் கோட்டைக் கடந்தார். ஆச்சர்யம்! எவராலும் நம்ப முடியவில்லை. சுறுசுறு இளைஞர்களைக் காட்டிலும் விறுவிறுவென இவர் எப்படி முன்னேறினார்? 'தினமும் 18 மணி நேரம் ஓட்டம்... ஆறு மணி நேரம் மட்டும் தூக்கம்!' என்று மற்றவர்கள் திட்டமிட்டார்கள். முந்தைய வருட சாதனையாளர்கள் அப்படித்தான் திட்டமிட்டு ஓடி இருந்ததால், இவர்களும் அதையே கடைபிடித்தார்கள். ஆனால், நான் அப்படி எந்தக்காலக் கெடுவும் வைத்துக்கொள்ளாமல் ஓடினேன். முடியவே முடியாதபோது மட்டும் கொஞ்சம் தூங்கிக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றிருக்கிறார் அந்த முதியவர்.

உங்கள் சிந்தனையை, கற்பனையை எந்த அளவுக்கு விசாலம் ஆக்கிக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் பாய்ச்சல் விஸ்வரூபம் எடுக்கும். அடுத்தடுத்த வருடங்களில் அந்த இளைஞர்கள் தூங்காமல் ஓடி, அந்த முதியவரின் சாதனையை முறியடித்தார்கள். ஆனால், அப்படி அதற்கென அவர்களைத் தூண்டியது அந்த முதியவரின் சிந்தனை!

எல்லா மனத் தடைகளும் நமக்கு நாமே விதித்துக் கொண்டவைதான்!

- ஆலிவர் ஹோல்ம்ஸ்

அது ஒரு பண்ணை. அங்கு வழி தவறி வந்த ஒரு வாத்துக் குஞ்சு ஒண்டிக்கொண்டது. 'குவாக் குவாக்' என்று கத்தியபடி துறுதுறுவென வளைய வந்துகொண்டு இருந்த அது, அங்கிருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ஆகிவிட்டது. 'பப்பி' என்று பெயர் வைத்து, செல்லம் கொஞ்சினார்கள். அன்றும் வழக்கம்போல 'குவாக் குவாக்' என்று கத்தியபடி வளைய வந்தது பப்பி. அப்போது சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கும் விநோதினி பப்பியைக் கடக்கும்போது, 'ஓ... ஸோ க்யூட்... இவ்வளவு காலையில் பாட்டுப் பாடி எனக்கு விஷ் செய்கிறாயே பப்பி... ஸோ ஸ்வீட்!' என்றாள். சிறிது நேரம் கழித்து செம குண்டான, பயங்கர சாப்பாட்டு ராமனான சேகர் அந்தப் பக்கம் வந்தான். 'குவாக் குவாக்' என்றது பப்பி. 'எப்பப் பாரு சாப்பிடுறதுக்கு எதுனா கேட்டுட்டே இரு... உனக்கு எப்பவும் இதே வேலை!' என்று சிடுசிடுத்துவிட்டுப் போனான். கடைசியாக, அதிபுத்திசாலியான ராஜ் பப்பியைக் கடந்தான். பப்பி 'குவா'க்கியது. 'ஓ பப்பி... கேள்விகள் கேள்விகள்... கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் நீ!' என்று சீட்டியடித்துவிட்டுப் போனான்.

'குவாக் குவாக்' என்று பப்பி அனைவரிடமும் ஒரே விதமாகத்தான் கத்தியது. ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப, அதை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள். இப்படித்தான், நாம் நம்மைச் சுற்றிஇருக்கும் மனிதர்களை, அமைப்புகளை, உலகத்தை எதிர்கொள்கிறோம். மனதுக்குள் சுற்றிச் சுழலும் எண்ண ஓட்டங்கள்தான் முன்தீர்மானத்துடன் நமது அணுகுமுறையை அமைத்துக்கொள்கிறது. இந்த உலகம் கண்ணாடி போன்றது. அதில் எப்படிப் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!

சுற்றுச்சூழல் - தினமும் நாம் நம்மை உற்று நோக்க வேண்டிய கண்ணாடி!

- ஜேம்ஸ் ஆலன்

Wednesday, October 27, 2010

யார் இவர்??

யார் இவர்??

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.


இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?


திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,


அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.


செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி
வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.


உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.


இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.


சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Monday, October 25, 2010

ஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை!!

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

முடிவு நம்மிடமே இருக்கிறது!
__________________

Thursday, August 26, 2010

என் கல்லூரி நாட்கள்....

நான் கல்லூரில் படிக்கும் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறலாம் என்று நினைத்துப்பார்த்தால்,அப்படி ஒன்றும் என் மனதில் தோன்றவில்லை.ஆனாலும் எழுத வேண்டும் என்று நினைத்துப்பார்த்தேன்,பல நினைவுகள் என் மனதில் வந்தது,அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் படித்தேன்.எனது மூன்றாம் ஆண்டு கல்வி படிப்பின் போது கல்லுரியின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன், அப்போது எங்கள் கல்லூரியில் இரு மாவட்டதையும் சேர்த்து(தூத்துக்குடி,நெல்லை) அனைத்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.மொத்தம் 50கல்லூரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடக்கும் ஒரு நாள் முன்பே எங்கள் கல்லூரிக்கு வந்து குவிந்தனர்,அவர்கள் தங்குவதற்கு மாணவப்பேரவை தலைவர் என்ற முறையில் எங்கள் குழு இடங்களை பிரித்து கொடுத்தோம்.முதல் நாள் போட்டிகள் மிகவும் ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் முடிந்தது,அன்று இரவு நான் மற்றும் நண்பர்கள் இரவு பத்து மணிக்கு மேல் ஒவ்வொரு கல்லூரி குழுவினரிடம் சென்று அவர்களின் வசதி மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான ஒத்திகையை பார்த்துக்கொண்டு வந்தோம்.அப்போது ஒரு அறை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தேன், அனால் உள்ளே ஒரே கூச்சலாகவும் ஒரு அழுகை சத்தமும் கேட்டது.என் நண்பர்களிடம் இது எந்த கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று கேட்டேன் அதற்கு அவர்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் பெயரை சொன்னார்கள். உடனே அங்கு இருந்து சென்று விட்டோம்.. ஒரு மணி நேரம் கழித்து நானும் என் நெருங்கிய நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்று கதவை தட்டினோம், கதவு திறக்கப்பட்டது அங்கு 12 மகளிர்கள் இருந்தனர்,அவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன் உடனே சத்தம் போடாதீங்க மெதுவாக பேசுங்கள் என்று ஒரு சேர சொன்னார்கள்,அதில் ஒருவர் மட்டும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த நான் யார் என்று கேட்டேன்,அதற்கு அவள் தான் கவிதா(உண்மையான பெயர் இது அல்ல) அவளை பார்த்த மறு வினாடி எனக்கு தூக்கி வாரிப் போட்டது,ஏன் என்றால் முதல் நாள் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவள் அவள்தான்.

என்ன விஷயம் என்று கேட்டேன், சுற்றிலும் மௌனம்!! சிறிது நேரம் கழித்து அவளுடைய தோழி பேசத்தொடங்கினாள். அவள் பெயர் கவிதா,சொந்த ஊர் திருப்பூர் அருகில் உள்ள கிராமம்,தந்தை தனியார் வங்கியில் உயர் பதவி,வீட்டில் அம்மா மற்றும் ஒரு தம்பி.தந்தை வேலை காரணமாக அடிக்கடி ஊர் மாறுவார். இவள் பள்ளிப் படிப்பு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில்.தன் படிப்பை விடுதியில் இருந்து தொடர்ந்தாள். நல்ல அழகு. கலை,படிப்பு மற்றும் விளையாட்டு அனைத்திலும் சுட்டி!! தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக,இரவில் கண் விழித்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சக தோழியிடம் இருந்து போதை ஊசிக்கு அடிமையானாள். அன்று தொடங்கிய பழக்கம் இன்று கல்லூரி வரை தொடர்கிறது.
அனைத்தையும் கேட்டறிந்தப்பின், மனக்கஷ்டதோடு இதைப்பற்றி நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றோம்.
மறு நாள் வழக்கம் போல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிந்தது. கவிதா எல்லா நிகழ்ச்சிகளையும் நன்றாக செய்து முடித்தாள்,அனைவரது பாராட்டையும் பெற்றாள். அனைவரது கண்களும் அவளையே சுற்றி வந்தது. அன்று மாலை அவளைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்து, அவள் அறைக்கு சென்றேன்.அங்கு இறுதி நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள். என்னைப்பாத்த அவளின் தோழி நான் வந்து இருப்பதை அவளிடம் சொன்னாள். என்னைப்பார்த்து அருகில் வந்தாள். நான் என்னை அவளிடம் அறிமுகம் செய்தேன்,எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.பின் அவளுக்கு என் வாழ்த்துதல்களை கூறினேன்,ஒரே வரியில் நன்றி என்றாள். சற்றும் யோசிக்காமல் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்,அவள் சற்று யோசித்து,என்ன விஷயம் என்றாள், சொல்கிறேன் என்றேன்.ஒரு மணி நேரம் கழித்து பேசலாமே என்றாள்,சரி என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தேன்.மனம் படப்படத்தது.சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவளை பார்க்க சென்றேன்,தயாராக இருந்தாள், காபி சாப்பிடலாமா என்றேன், ம்ம்ம்.. என்றாள்,உடனே அருகில் உள்ள எங்கள் கேன்டீனுக்கு அழைத்துச்சென்றேன். சற்று ஒதுங்கி அமர்ந்தோம். என்ன விஷயம் என்றாள், எப்படி பேச்சை தொடங்கலாம்,என்று நினைத்தப்படியே,முதலில் என்னை உன் அண்ணனாக நினைத்துக்கொள் என்றேன்.அதை கேட்டதும் அவள் கண் கலங்கியது.......


விரைவில் தொடரும்....

Wednesday, August 11, 2010

மனித உடம்பு எனும் அதிசயம்
நாம் எதைஎதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம் .ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம் தான்.

* உங்களின் பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..

* மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..

* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...

* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன..

* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க முடியும் ...

* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....

* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் ...

* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...

* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....

* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......

(அட உடனே விரலை மூக்கின் மேல் வைத்தால் எப்படி!!!)

Wednesday, August 4, 2010

வார்த்தை விளையாட்டு!!!

திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)கீழே படியுங்கள்அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லைஅவள் :நீ என்னை விரும்புகிறாயா ?அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்அவள் :என்னை திட்டுவாயா ?அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

.......
.......
.......


திருமணத்திற்குப் பின் :கீழிருந்து மேலே படியுங்கள்........

Friday, July 30, 2010

நான் ரசித்த சில கவிதைகள்..... பாகம் - 2

கண்டு கொண்டேன்....
கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

நட்பு..!சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு.


காதல்!கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!

ஏக்கம்விளை நிலங்கள்
எல்லாம்
வீட்டு மனைகளாக!
ஏக்கத்துடன் நின்றன,
புல்மேய முடியாமல்
மாடுகள்

சித்தனும் பித்தனும் இயற்கை!
பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!

நினைவுசாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வாழ்க்கை கணக்குவாழ்க்கையில்,
அன்பை கூட்டிக்கொள்!
அறிவை பெருக்கிக்கொள்!
இனிமையை
தனிமையால் வகுத்துக்கொள்!
பாவத்தைக் கழித்துக் கொள்!
பிறருடன் சமமாக
வாழ கற்றுக் கொள்...!

Friday, July 23, 2010

kavithaikaL...

நான் ரசித்த சில கவிதைகள்.....

வேர்கள்!!!

உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
என்னையும் மாற்றிக்கொள்வேன்!!!
அம்மா

அவளை உதைத்த பொழுதில் கூட
செல்லமாய் என்னை
வருடின
அவள் விரல்கள்
வலியில் துடித்து கொண்டு கூறினாள்
என் செல்லமே
பயப்படாதே!
உனக்கு வலிக்காமல்
உன்னை பெற்றேடுப்பேன்..நட்பு!!

அழுதவுடன் அரவணைக்கும்
அன்னையிடம் ஆரம்பிக்கும்
அந்த அழகிய நட்பு !!!

ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே
ஆடாத ஆட்டம் ஆட
ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்
ஆண்களின் நட்பு !!!

இவன் வீட்டு சாப்பாடு
இனம் விட்டு இடம் மாறி
இளம் சிட்டாய் இவ்வுலகையே
இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!

ஈயாய் ஒற்றிக்கொள்வோம்
ஈருயிராய் வாழ்ந்திடுவோம்
உள்ளதெல்லாம் செலவழிப்போம்
ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!

எந்த ஜாதியும் அறியமாட்டோம்
ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்
ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்
ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!

ஓரிடத்தில் இல்லா விட்டாலும்
ஓருயிராய் நினைவு கொள்வோம்
ஓளவை வயது வரை ஒற்றுமையாய்
உலகை அளப்போம் !!!!அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...

உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை...!!!மௌனம்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!வாழ்க்கைப் பயணம்...

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......
பாசம்!!

பாசம் வைத்தவர்கள் எல்லாம்

தூர போகிறார்கள் என்னை பிரிந்து

இனி பாசம் வைப்பதில்லை

என்னருகில்,
ஒருவராவது...
குருதி ப‌டிம‌ங்க‌ள்

கைக‌ள் எங்கும் க‌றைக‌ள்
அது என்ன‌வென்று கூட‌ என்னால் யூகிக்க‌ முடிய‌வில்லை
என் சுவாச‌ ப‌குதி முழுவ‌தும் ப‌டிந்து ப‌டிந்து
ப‌டிம‌ங்க‌ள் ஆகி போன‌ குருதியோட்ட‌ம் !!
பூமிதாயின் குலுங்க‌லால் சிதில‌ம‌டைந்த‌
நாட்க‌ளில் குப்பைக‌ளை போல‌
வ‌ண்டிக‌ளில் ஏறிய‌ பிண‌க்குவிய‌ல்க‌ள்!!
அன்றோ க‌ட‌ல்தாயின் சீற்ற‌த்தால் சுழ‌ன்று வ‌ந்து
சுருட்டி கொண்டு போன‌ உயிர்க‌ள் எங்கோ?
இதுவெல்லாம் போதாதென்று இன‌ம்
ம‌த‌ம் மென‌ த‌லை பிய்த்து த‌சை பிரிக்கும் சில‌ர்!!
என்ன‌தான் ந‌ட‌க்கும் என‌ சில‌ர்!!
எதுவும் புரியாம‌ல் சில‌ர்!!
என்னை போன்ற‌ குருதி ப‌டிம‌ங்க‌ளிடையே சில‌ர்!!
ஈழ‌ த‌மிழ‌னாய்.........
ஊமைக் கொலைகள்...

பனித்துளி உறிஞ்சிடும்
சூரியன்...

மரம் வெட்டிடும்
கோடாரி...

பூமியை பிளந்திடும்
பூகம்பம்...

வானத்தை வடுப்படுத்தும்
மின்னல்...

பூ பறிததெறியும்
கரங்கள்...

நீரினை சிதறவிடாத
மேகங்கள்...

தழுவிச் சென்றிடாத
தென்றல்...

மௌனமாய் கண்ணீர்விடும்
மனங்கள்...

இவற்றில் நடப்பவையெல்லாம்
"ஊமைக் கொலைகளே..."


நன்றி!!!

Monday, July 12, 2010

வாழ்க்கை பயணங்கள்.....

வாழ்க்கை பயணங்கள்.....பிறப்பு,மழலை,

சிறு வயது குறும்பு,

படிப்பு,பொழுதுபோக்கு,

வேலை,சம்பாத்தியம்,

திருமணம்,போராட்டங்கள்,

குழந்தைகள்,

குழந்தைகளின் - வளர்ப்பு,படிப்பு,

வேலை,திருமணம்,

நல்லது,கெட்டது,

இன்பங்கள்,துன்பங்கள்,

பலருக்கு உதவுதல்,ஒய்வு,

மலரும் நினைவுகள்,மனநிறைவு

இறப்பு!!!

இதுதான் வாழ்க்கையா.....?

Friday, July 9, 2010

இது நியாயம்தானா?

அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள் குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாககக் கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்பு தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க வாழ்க பல்லாண்டு ...! கடைசித் தமிழனை அழிக்கும் வரை...!!!

நன்றி: இரா. ரவி

Tuesday, July 6, 2010

சிந்திக்க சில .....

"வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்தவனுக்கு
வேப்பங்காயும் இனிக்கத்தான் செய்யும்"


"அவமானங்களை சேகரித்து வையுங்கள்,வெற்றி உங்களை தேடி வரும்"


"வாழ்க்கையில் தோல்வி என்பது முடிவு அல்ல,
அந்த தோல்வியே வெற்றிக்கு முதல் படி"


"நல்லவர்கள் கூட தோற்று போகலாம்,ஆனால்
நம்பிகை உள்ளவர்கள் ஒரு போதும் தோற்று போவதில்லை"


"வெற்றிக்காக காத்து இருப்போரை விட,
வெற்றிக்காக உழைப்போரே, சிறந்த படைப்பாளி"


"பிராத்தனை செய்யுங்கள்,கடவுளுக்கு அருகில் நிங்கள் செல்லலாம்!!
சேவை செய்யுங்கள்,கடவுள் உங்கள் அருகில் வருவார்!!"


சிந்தித்து சிரிக்க சில ....


காதல் கடிதத்திற்கும்,பரீட்சை தாளுககும் உள்ள வித்தியாசம்:

காதல் கடிதம் : உள்ளுக்குள்ள நிறைய இருக்கும் ஆனால் எழுத முடியாது

பரீட்சை தாள் : உள்ளுக்குள்ள ஒன்னுமிருக்காது ஆனால் நிறைய எழுதலாம்
மனைவி : டார்லீங்,நான் உஙகளுக்கு இப்படி சமைச்சு போட்டுக்கிட்டே இருந்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கணவன்:என்னோட இன்சூரன்ஸ் பணம் சிக்கிரம் உனக்கு கிடைக்கும்.

மனைவி : ???

Tuesday, June 29, 2010

ரூபாய் 400 கோடி செலவில் நம் முதல்வர் உருவாக்கிய முக்கிய அறிவிப்புகள்:

01.தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க சட்டம்.

02.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் 'தமிழ்ச் செம்மொழி' அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம் பெறும்.

03.மத்தியில், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்

04.சென்னை ஐகோர்ட்டில்,தமிழை பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

05.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும்,குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்

06.இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்
(என்ன ஒரு நாடகம்!!!! தமிழ் இனத் தலைவா.....))

07.சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவருக்கு 'கண்யன் பூங்குன்றனர்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

08.கோவையில்,'செம்மொழிப் பூங்கா' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போககுவரத்து நெரிசலை போக்க ரூ.100 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

09.குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். (ஐயோ சாமி!!!)

மேலே கூறிய அனைத்து அறிவிப்புகளையும், ரூபாய்.400 கோடி செலவு செய்து கூற வேண்டிய அவசியம் இல்லை. இதை நம் முதல்வர் சென்னையில்,கோட்டையில் அல்லது சட்டசபையில் அறிவித்து இருக்கலாம்.

(அடுத்த வருடம் வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு,தன் விளம்பரத்துக்காக நடத்திய மாநாடு தான் இது)

இதை தட்டிக் கேட்க நம் நாட்டில் யாரும் இல்லை!!!

எதிர் கட்சி (அ.தி.மு.க) என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?(பாவம் அந்த அம்மையார் தோழியின் அடிமையாக இருந்துக்கொண்டு.எம்ஜியார் தொடங்கிய கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார்)

அது போல் கம்யூனீஸ்டு கட்சி, அவர்களின் கொள்கைகளை மறந்து விட்டு, என்ன செய்யலாம் என்று முழித்துக்கொண்டு இருக்கிறது.
மற்றப்படி அனைத்து கட்சிகளும், அவர்களுடைய சுய நலத்துக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அதனால் குழந்தை இல்லாத வீட்டில், கிழவன் தூள்ளி............ (முடித்துக்கொள்ளுங்கள்)

தமிழ் நாட்டு மக்கள் பாவம்......

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?????

சிந்தித்து பதில் சொல்லுங்கள்....

Friday, June 25, 2010

தமிழ் செம்மொழி மாநாடு தேவையா?

தமிழ் செம்மொழி மாநாடு தேவையா?


இப்போது கோவையில் நடைபெறும் தமிழ்செம்மொழி மாநாடு இப்போது நம் நாட்டுக்கு தேவையா, என்று சற்று சிந்தித்து பார்த்தால் அது இப்போது தேவை இல்லை என்று தான் தோன்றும். அது தான் உண்மை. இந்த மாநாட்டால் யாருக்கு லாபம்? என்னை பொருத்தவரை இந்த மாநாடு தி.மு.க ம்ற்றும் அதன் கூட்டனிக்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து,எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்து அவர்களுடைய விளம்பரத்திற்காக நடத்தும் மாநாடு தான் , மற்றப்படி இந்த மாநாட்டால் யாருக்கு என்ன பயன்? தமிழ் நாட்டு மக்களுக்கா? அல்லது நம் தமிழ் மொழிக்கா? அல்லது பிற நாட்டில் வாழும் நம் மக்களுக்கா,(குறிப்பாக இலைங்கையில் வாழும் நம் தமிழ் மக்களுக்கா? சற்று சிந்தித்து பார்த்தால் நம் அனைவருக்கும் நன்கு புரியும். இந்த மாநாட்டுற்கு ஆகும் செலவு ரூபாய் 400 கோடி!!!! இது யார் பணம்? எல்லாம் நம் மக்கள் வரி பணம்!!! இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் வரும் போது தமிழராக இருந்து பதில் கொடுங்கள்..... முடிந்தால்!!

Wednesday, June 23, 2010

Meaningful message from the pictures!!!


Just watch it down one by one and read to know the nice & meaningful message:


" Accept the Pain,Future will be Fruitful"Don't feel the work you are doing is pain,because there will be always a reason for that pain or work, So face the pain,for the pain you face, there will be definitely happiness END.


' Don't ask for a lighter load, but pray God for a stronger back "Saturday, June 19, 2010

UNTHINKABLE – நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.


UNTHINKABLE – என்றால் என்ன? நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன? இந்த வழமையான முறைகள், வழமையற்ற முறைகள் என்பதை யார் தீர்மானிப்பது?

தற்செயலாக இந்த ஹாலிவுட் படத்தை பார்த்த போது ஆரம்பத்தில் வழக்கமான விஜயகாந்த் மசாலா என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிய வந்தது. பார்வையாளனது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அரசியல், நீதி, நேர்மைகளை வைத்து உணர்ச்சியைக் கிள்ளி விடுவதில் அல்லது மடை மாற்றுவதில் இந்த படமும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அமெரிக்க குடிமகனான யூசுப், மூன்று நகரங்களில் அணுகுண்டை தயார் செய்து வைத்து விட்டு, அவை மூன்று நாட்களில் வெடிக்கும் என்பதை வீடியோவில் தெரிவித்து விட்டு, போலீசிடம் தானாகவே பிடிபடுகிறான். எல்லா சேனல்களிலும் யூசுப்பின் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதை எஃப்.பி.ஐ(FBI), இராணுவம், முதலான எல்லா அரசு பாதுகாப்பு நிறுவனங்களும் சேர்ந்து விசாரிக்கின்றன.

எஃப்.பி.ஐயின் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் தலைவியான ஹெலன் ப்ராடி ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதே சமயம் பெண் என்பதாலோ என்னமோ மென்மையான அல்லது மனிதாபிமான அதிகாரி. அவளது அணி உறுப்பினர்கள் அணுகுண்டு எப்படி சாத்தியமானது என்பதை விசாரிக்கிறார்கள். யூசூப்பிடமிருந்து அந்த மூன்று இடங்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு ராணுவம், ப்ராடி, அப்புறம் ஹெச் எனப்படும் நடிகர் சாமுவேல் ஜாக்சன் எல்லோரும் கூட்டாக முயல்கிறார்கள்.கருப்பரான ஹெச் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வெளியாள். அவன் பொதுவில் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், மொன்னைத்தனத்தையும் கிண்டலித்து விட்டு இவையெல்லாம் வேலைக்காகாது என்ற கலக மனப்பான்மை உடையவன். ராணுவ தலைமை கமாண்டரிடமிருந்து விசாரிக்கும் பொறுப்பை வம்படியாக வாங்கிக் கொள்கிறான். அவனது நடத்தைக்கு நேரெதிர் துருவமாக ப்ராடி வாதிடுகிறாள். இவர்களுக்கிடையில் எப்படியாவது குண்டு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தால் சரி என்று ராணுவ கமாண்டர் காரியவாதமாக இருக்கிறான்.முழுப் படமும் யூசுப்பை வைத்திருக்கும் சித்திரவதைக் கூடம் மற்றும் விசாரணை அரங்கிலேயே நடைபெறுகிறது. ஆரம்பத்தில் எல்லாரும் ப்ராடி உட்பட யூசுப்பிடம் விசாரிக்கிறார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக அழுத்தம் கூடுகிறது. என்ன செய்வது? அணுகுண்டுகள் வெடித்தால் குறைந்தது ஒருகோடி மக்கள் கொல்லப்படுவார்கள். எப்படி தடுக்க முடியும்?வழக்கமான விசாரணைகளின் போதாமையை எள்ளி நகையாடும் ஹெச் ஒரு சுத்தியலால் யூசுப்பின் சுண்டுவிரலை அடித்து நசுக்குகிறான். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். யூசுப் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் அவனை இப்படி சித்திரவதை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் ப்ராடி வாதிடுகிறாள். குண்டு வைப்பது மட்டும் சட்டத்திற்கு உடன்பாடானதா என்று ஹெச் மடக்குகிறான்.

சித்திரவதை செய்தது போக அவன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ப்ராடி அன்பாக யூசுப்பிடம் விசாரிக்கிறாள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயம்தானா என்று கேட்கிறாள். யூசுப் ஒரு எக்காளமான புன்முறுவலுடன் அதை புறந்தள்ளுகிறான். ஒரு கட்டத்தில் தான் அமெரிக்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுவதாகவும் அது ஏற்கப்பட்டால் குண்டுகள் இருக்குமிடத்தை தெரிவிப்பதாகவும் கூறுகிறான். அது ஏற்கப்படுகிறது.

அவனது சித்திரவதை காயங்களை மறைத்து ஒரு போர்வை போர்த்தப்படுகிறது. காமராவைப் பார்த்து யூசுப் தெளிவான குரலில் பேசுகிறான். “உலகெங்கும் உள்ள இசுலாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு வாபஸ் வாங்க வேண்டும்.” இதுதான் அவனது கோரிக்கை.

ஒரு அரை லூசு பயங்கரவாதிக்காக அமெரிக்கா வாபஸ் வாங்குவதா என்று ராணுவ கமாண்டர் தலையில் அடித்துக் கொள்கிறான். நிறைவேற சாத்தியமே இல்லாத இந்த கோரிக்கைதான் அவனது குண்டுகளை கண்டுபிடிக்கும் என்றால் வேறு வழியில்லை, விசாரணை சூடுபிடிக்கிறது. இல்லை சித்திரவதை அனல் பறக்கிறது.

நிதானமாக ஒரு லேத் பட்டறை தொழிலாளியின் லாகவத்தோடு எந்த உணர்ச்சியுமின்றி இயல்பாகவே ஹெச் சித்திரவதைக் கருவிகளோடு யூசுப்பை வதைக்கிறான். அவனது நகங்கள் பிடுங்கப்படுகின்றன. விரல்கள் நசுக்கப்படுகின்றன. அந்தரத்தில் கட்டி தொங்க விடப்படுகிறான். உடலெங்கும் கத்திக் குத்து காயங்கள். அவனது அலறல் அவ்வப்போது சித்திரவதைக் கூடத்தின் மரண இசையாக ஒலிக்கிறது. ஆனாலும் அவன் பேசமறுக்கிறான்.

ப்ராடி அவனிடம் அவனது அன்பான மனைவி, குழந்தை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சென்டிமெண்டாக விவரித்து கெஞ்சுகிறாள். அவன் ஒரு ஹீரோ எனவும், சும்மா பயமுறுத்துவதற்காகத்தான் இந்த வெடிகுண்டு விளையாட்டை அவன் நடத்துகிறான் என்றெல்லாம் பேசுகிறாள். யூசுப் ஒரு இடத்தின் முகவரியைக் கூறி அங்கு குண்டு இருப்பதாக தெரிவிக்கிறான்.

கமாண்டோ படை அங்குசென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தை எடுக்கும் போது அதிலிருந்த பொத்தான் அழுத்தப்பட்டு அருகாமை வணிக அங்காடியில் குண்டு வெடிக்கிறது. 53 பேர்கள் கொல்லப்படுகின்றனர். தான் விளையாடவில்லை என்பதை தெரிவிக்கவே இந்த குண்டு வெடிப்பு என்கிறான் யூசுப்.


அதுவரை நிதானமாக இருந்த ப்ராடி இப்போது சினங்கொண்டு அவனது நெஞ்சை கத்தியால் கிழித்தவாறே கொல்லப்பட்டவர்களுக்காக வாதிடுகிறாள். ஈராக்கிலும் இதே போல தினமும் 53 அப்பாவிகள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்படுகிறார்களே, அது தெரியாதா என்று வினவுகிறான் யூசுப். தன்னை அறியாமலே தானும் இப்போது சித்திரவதையைக் கைக்கொள்ள ஆரம்பித்த அதிர்ச்சியில் ப்ராடி செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்குள் அந்த போராட்டம் தீவிரமடைகிறது.

எல்லா சித்திரவதைகளையும் கையாண்ட பிறகும் யூசுப்பை பேசவைப்பதில் தோல்வியடையும் ஹெச் சோர்வுறுகிறான். இருப்பினும் அவனது UNTHINKABLE முறைகள் இன்னும் தீரவில்லை. இசுலாமிய அடையாளத்துடன் இருக்கும் யூசுப்பின் மனைவியை அழைத்து வரச்சொல்கிறான். ஆரம்பத்தில் தனது கணவன் அப்பாவி என்று வாதிடும் அவளை பயங்கரவாதிக்கு உதவிய குற்றத்திற்காக உள்ளே தள்ள முடியும் என்று ப்ராடி மிரட்டுகிறாள்.

கணவனது எதிரே அமரவைக்கப்படும் அவள் அழுதவாறே ஹெச் எழுப்பும் கேள்விகளை கேட்கிறாள். யூசுப் அழுதாலும் உறுதியாக இருக்கிறான். இனி அவனது மனைவியையும் அவன் முன்னே சித்திரவதை செய்யப்போவதாக ஹெச் கூறுகிறான். அனைவரும் அவனை தடுக்கிறார்கள். அந்த தள்ளுமுள்ளுவையும் மீறி அவன் யூசுப் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்கிறான். அவளும் இரத்தம் வடிய கொல்லப்டுகிறாள்.

இந்த அதிர்ச்சியிலேயே எல்லாரும் நீடிக்க முடியவில்லை. குண்டுகள் வெடிப்பதற்கான நேரம் நெருங்கி வருகிறது. ஹெச் இப்போது யூசுப்பின் சிறு வயது குழந்தைகளை கேட்கிறான். ப்ராடி கடுமையாக எதிர்க்கிறாள். மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இசுலாமிய அடையாளத்துடன் வரும் அந்த பிஞ்சுகள் சித்திரவதைக் கூடத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றனர். யூசுப் வெளியே கொண்டு வரப்பட்டு சேம்பரின் கண்ணாடிக்கு முன்னே அமரவைக்கப்படுகிறான். அவனது முகமூடி கழட்டப்படுகிறது. உள்ள குழந்தைகளுடன் சித்திரவதைக்கு தயாரகும் ஹெச். இதற்கு மேலும் தாளமாட்டாமல் அழுது வெடிக்கும் யூசுப் கடகடவென்று குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இடங்களையும் கூறுகிறான். ஒரு வழியாக பிரச்சினை முடிவது போல தெரிகிறது.


இல்லை, யூசுப் பயன்படுத்திய அணுகுண்டு மூலப்பொருளில் மூன்று குண்டுகளில் வைத்தது போக மிச்சம் இருக்கிறது, அது நாலாவது குண்டு என்கிறான் ஹெச். அதைக் கண்டுபிடிக்க யூசுப்பின் குழந்தைகள் மீண்டும் தேவைப்படுவார்கள் என்கிறான். ப்ராடியைத் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்கள். குண்டு வெடித்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்கிறாள் ப்ராடி. யூசுப்பின் கட்டுக்களை அவிழ்த்து விடும் ஹெச் இனி அவன் சுதந்திரமனிதன் என்கிறான். ராணுவ கமாண்டரின் துப்பாக்கியைப் பறிக்கும் யூசுப் தற்கொலை செய்கிறான். வெடிக்கக் காத்திருக்கும் நாலாவது வெடிகுண்டின் நேரக்கருவியின் கவுண்டவுணோடு கேமரா நம்மிடமிருந்து விடைபெறுகிறது.
அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை படம் எழுப்புகிறது. ஆனால் முகத்தில் அறையும் அமெரிக்க யதார்த்தம் இந்த புனைவின் மீது காறி உமிழ்கிறது.

உலகெங்கும் சி.ஐ.ஏ நடத்தியிருக்கும் சதிகள், கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எண்ணிலடங்கா. உலகின் எல்லா வகை சித்திரவதை முறைகளுக்கும் ஊற்று மூலம் சி.ஐ.ஏதான். குவாண்டமானோ பேயில் அமெரிக்க சட்டம் செல்லாத இடத்தில் அப்பாவிகளை வைத்து சித்திரவதை செய்தவற்கென்றே ஒரு முகாமை நடத்தும் அமெரிக்காவின் உண்மை முகத்தை இந்த படம் திறமையாக மறைக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் என்பதையோ, அதில் சில இலட்சம் குழந்தைகளும் உண்டு என்பதையோ இந்த படம் சுலபமாக கடந்து செல்கிறது. யூசுப்பின் குண்டு கொல்லப்போகும் அமெரிக்க உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளின் மனிதர்களுக்கு இல்லை போலும். படத்தில் இதையே யூசுப் கேட்டாலும் அவனது கேள்வியின் நியாயத்தை படம் பலவீனமாக்குகிறது.

யூசுப்பின் குழந்தைகளை ஹெச்சிடமிருந்து காப்பாற்றுவதற்காக கதவை உடைத்து உள்ளை நுழையும் அமெரிக்க வீரர்களின் உண்மை முகத்தை பாக்தாத் மண்ணில்தான் பார்க்க முடியும். பாரசீக மண்ணில் ரத்தம் குடிக்கும் அமெரிக்க கழுகு இரண்டு குழந்தைகளுக்காக கண்ணீர் விடுவதை நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் பார்வையாளர்கள் விடும் கண்ணீர் இங்கே தந்திரமாக வரவழைக்கப்படுகிறது.

குண்டு வெடித்தாலும் வெடிக்கட்டும் அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று ப்ராடி அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சி அமெரிக்க மனிதாபிமானத்தின் குறியீடாக இதயத்தை அழுத்துகிறது. ஆனால் மருந்து தடைக்காகவே பல்லாயிரம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டது அமெரிக்க மனசாட்சியை உலுக்கவே இல்லையே? 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விசாரிப்பவர்கள் எல்லாரும் யூசுப்பை அரசியல் ரீதியாக கன்வின்ஸ் செய்து பேசவில்லை. அப்படி பேசவும் முடியாது என்பது வேறு விசயம். ப்ராடி கூட அவனது மனைவி, குழந்தைகள், அன்பான குடும்ப வாழ்க்கை என்றுதான் விளக்குகிறாள். ஆனால் ஒரு போராளி தனது ஆன்ம பலத்தை சமூக அரசியல் காரணிங்களிலிருந்துதான் பெறுகிறான் என்பதை இந்த படம் சிறுமைப்படுத்துகிறது. தனது சொந்த பந்தங்களின் மகிழ்ச்சியை விடவும் தனது சமூகத்தின், நாட்டின் துன்பத்தை களைய நினைக்கும் போராளியின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவனது சாரம் என்ன?


யூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது? அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான்?. வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது? அந்த வலியோரின் கொடூரம் நிறுத்தப்படாத போது எளியோரின் செயல் மட்டும் ஏன் பயங்கரவாதமாக பொதுப்புத்தியில் நுழைக்கப்படுகிறது?

ஆக பயங்கரவாத்தின் இந்த பரிமாணங்களை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறார். அது வெறும் சட்டம், சிவில் உரிமை, சென்டிமெண்டாக மட்டும் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தீவிரவாதிக்கு மனித உரிமை சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதல்ல பிரச்சினை. அமெரிக்க அரசு தானே வைத்திருக்கும் சட்டங்களும், புதிதாக உருவாக்கும் சட்டங்களும் எந்த மனித உரிமையை வைத்து உருவாக்குகிறது? அமெரிக்க நலன் என்ற வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருப்பது அமெரிக்க முதலாளிகளின் நலன் என்பதுதான் அவர்களது மனித உரிமை அளவுகோல். அதனால்தான் அமெரிக்காவின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்களது சட்டப்படியே நியாயப்படுத்தப்படுகின்றன.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இன்னொரு புறம் பயங்கரவாதிகள் தமது வலுவான எதிரிகளை வீழ்த்த முடியாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே உள்ள அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றன. அப்படி ஒரு நியாயப்படுத்துதலின் ஒரு சரடைத்தான் இந்த படம் சித்தரிக்கிறது.


பயங்கரவாதிகளை வழமையான முறைகளில் சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் ஹெச்சின் கருத்து. அமெரிக்க அரசையும் அப்படி வழமையான முறைகளில், சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் பயங்கரவாதிகளின் கருத்து. எனினும் இரண்டு பயங்கரவாதங்களையும் சமப்படுத்தி பார்ப்பதால் அது இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கே உதவி செய்யும். அமெரிக்காவை வீழ்த்தும் சக்தியை உலக மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அது வரை இந்த ஆட்டம் நடக்கத்தான் செய்யும்.


அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும்.


பரிசோதித்துப் பாருங்கள்! பரிசோதிப்பதற்காகவே பாருங்கள்!!


நன்றி: தர்மராஜன்

Thursday, June 17, 2010

தூக்கம்!!!

- தினமலர்

Friday, June 4, 2010

கோடியில் இருவர்......

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று

. மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?


கோடியிwadadaassல் ஒருவர் - 1
ஈரோடு அருsdfdfகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.


தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்


இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.


ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.


பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.

ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.


காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.


கோடியில் ஒருவர் - 2

சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்கள “அய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!”...


“இந்த மரம் வளர்த்துறாரே” என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்”ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.


சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.
அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.


இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.

 
நன்றி : முரளிகுமார், மற்றும் பல நண்பர்கள்...!