Tuesday, February 9, 2010

முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப். 6 ல் தமிழ் திரையுலகின் சார்பில் __(?) வது பாராட்டு விழா.

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விழா. இந்நிகழ்ச்சியின் மூலம் கலைஞர் டிவி -ன் TRB ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி சிலருக்கு. முதல்வர் கருணாநிதிக்கு மேலும் ஒரு பாராட்டு விழா.முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப். 6 ல் தமிழ் திரையுலகின் சார்பில் __(?) வது பாராட்டு விழா. எதற்காக இந்த பாராட்டு விழா, பையனூரில் 90 ஏக்கர் அரசு நிலத்தை திரையுலகிற்கு இலவசமாக வழங்கியதற்காகவாம். சரி விஷயத்திற்கு வருவோம், இந்த பாராட்டு விழாவிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகைகளுக்காக கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இரத்துசெய்யப்பட்டன. இதன் மூலம் சில குத்தாட்ட நடிகைகள் நடனப்பயிற்சி மேற்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான சினிமா சார்ந்த தொழிலார்கள் வேலையின்றி நிற்கின்றனர். அவர்கள் என்ன கோடிகணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார்களா? அல்லது உலகநாயகர்களா? .. சாதரணமான தங்களின் தினசரி வருமானத்தை நம்பி பிழைக்கும் அடிமட்ட கூலி தொழிலாளர்கள் தானே.இவர்கள் வேலை இழப்பதைப் பற்றி கவலை இல்லாமல் அந்த 86 வயது மூத்த தமிழனுக்கு இப் பாராட்டு விழா அவசியம்தானா?. இந்த பாவச்செயலை தமிழினத்தலைவன் என்று தன்னைதானே ஆட்கள் வைத்து அழைத்து பெருமைபட்டுகொள்ளும் அந்த முதிர் வயது கலையுலக காவலாளி எண்ணிப் பார்த்தாரா?!!. மனசாட்சியுள்ள எந்த மனிதனாவது மற்றவர்களின் பிழைப்பைக் கெடுத்து தான் பாராட்டபடுவதை எண்ணி பெருமைப்படுவரா?. தனக்கு பிச்சைபோடும் சாதாரண மனிதர்கள் கூட நன்றாய் பிழைக்கவேண்டும் என்று என்னும் பிச்சைக்காரன் போல் கூட இல்லாமல் பலகோடி மக்கள் பிச்சையாய் போட்ட முதல்வர் எனும் பதவியில் அமர்ந்து கொண்டு அம்மக்களுள் மக்களான சினிமாத் தொழிலாளர்களின் வேலையைக் கெடுத்து வயிற்றில் அடிக்கும் இத்தகைய இழிவான செயல் எதற்காக?சரி, மற்ற ஒரு சில நடிகர்,நடிகைகளாவது இந்த குறிப்பிட்ட நாட்களில் பிறமொழிப்படங்களில் நடிக்கச் செல்லலாம் என்றால், அதற்கு குறுக்கீடாக ஒரு தடை. இந்த விழாவில் ஆடாத மற்றும் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகளுக்கு இனிமேல் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடையாம்? இதைப் பற்றி நடிகர் அஜித்குமார் விழா மேடையிலேயே வெளிப்படையாக தாங்கள் மிரட்டப்படுவதாக குமுறினார், அதற்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்றுகைதட்டினார். நீங்கள் இவ்வளவு கேவலமானவர்களா? ஐயா, கருணாநிதி அவர்களே ! காலம் கடந்து செல்லும், அப்பொழுது நீங்கள் இலவசமாக கொடுத்த அரசு நிலத்தில் எத்தனை அடிமட்ட சினிமா சார்ந்த கூலித் தொழிலாளர்கள் பயனடைகிறார்கள்!! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...."விதியே! விதியே! என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை??!!!"

2 comments:

ponraj said...
This comment has been removed by the author.
ponraj said...
This comment has been removed by the author.