Thursday, August 26, 2010

என் கல்லூரி நாட்கள்....

நான் கல்லூரில் படிக்கும் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறலாம் என்று நினைத்துப்பார்த்தால்,அப்படி ஒன்றும் என் மனதில் தோன்றவில்லை.ஆனாலும் எழுத வேண்டும் என்று நினைத்துப்பார்த்தேன்,பல நினைவுகள் என் மனதில் வந்தது,அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் படித்தேன்.எனது மூன்றாம் ஆண்டு கல்வி படிப்பின் போது கல்லுரியின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன், அப்போது எங்கள் கல்லூரியில் இரு மாவட்டதையும் சேர்த்து(தூத்துக்குடி,நெல்லை) அனைத்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.மொத்தம் 50கல்லூரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடக்கும் ஒரு நாள் முன்பே எங்கள் கல்லூரிக்கு வந்து குவிந்தனர்,அவர்கள் தங்குவதற்கு மாணவப்பேரவை தலைவர் என்ற முறையில் எங்கள் குழு இடங்களை பிரித்து கொடுத்தோம்.முதல் நாள் போட்டிகள் மிகவும் ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் முடிந்தது,அன்று இரவு நான் மற்றும் நண்பர்கள் இரவு பத்து மணிக்கு மேல் ஒவ்வொரு கல்லூரி குழுவினரிடம் சென்று அவர்களின் வசதி மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான ஒத்திகையை பார்த்துக்கொண்டு வந்தோம்.அப்போது ஒரு அறை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தேன், அனால் உள்ளே ஒரே கூச்சலாகவும் ஒரு அழுகை சத்தமும் கேட்டது.என் நண்பர்களிடம் இது எந்த கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று கேட்டேன் அதற்கு அவர்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் பெயரை சொன்னார்கள். உடனே அங்கு இருந்து சென்று விட்டோம்.. ஒரு மணி நேரம் கழித்து நானும் என் நெருங்கிய நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்று கதவை தட்டினோம், கதவு திறக்கப்பட்டது அங்கு 12 மகளிர்கள் இருந்தனர்,அவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன் உடனே சத்தம் போடாதீங்க மெதுவாக பேசுங்கள் என்று ஒரு சேர சொன்னார்கள்,அதில் ஒருவர் மட்டும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த நான் யார் என்று கேட்டேன்,அதற்கு அவள் தான் கவிதா(உண்மையான பெயர் இது அல்ல) அவளை பார்த்த மறு வினாடி எனக்கு தூக்கி வாரிப் போட்டது,ஏன் என்றால் முதல் நாள் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவள் அவள்தான்.

என்ன விஷயம் என்று கேட்டேன், சுற்றிலும் மௌனம்!! சிறிது நேரம் கழித்து அவளுடைய தோழி பேசத்தொடங்கினாள். அவள் பெயர் கவிதா,சொந்த ஊர் திருப்பூர் அருகில் உள்ள கிராமம்,தந்தை தனியார் வங்கியில் உயர் பதவி,வீட்டில் அம்மா மற்றும் ஒரு தம்பி.தந்தை வேலை காரணமாக அடிக்கடி ஊர் மாறுவார். இவள் பள்ளிப் படிப்பு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில்.தன் படிப்பை விடுதியில் இருந்து தொடர்ந்தாள். நல்ல அழகு. கலை,படிப்பு மற்றும் விளையாட்டு அனைத்திலும் சுட்டி!! தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக,இரவில் கண் விழித்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சக தோழியிடம் இருந்து போதை ஊசிக்கு அடிமையானாள். அன்று தொடங்கிய பழக்கம் இன்று கல்லூரி வரை தொடர்கிறது.
அனைத்தையும் கேட்டறிந்தப்பின், மனக்கஷ்டதோடு இதைப்பற்றி நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றோம்.
மறு நாள் வழக்கம் போல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிந்தது. கவிதா எல்லா நிகழ்ச்சிகளையும் நன்றாக செய்து முடித்தாள்,அனைவரது பாராட்டையும் பெற்றாள். அனைவரது கண்களும் அவளையே சுற்றி வந்தது. அன்று மாலை அவளைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்து, அவள் அறைக்கு சென்றேன்.அங்கு இறுதி நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள். என்னைப்பாத்த அவளின் தோழி நான் வந்து இருப்பதை அவளிடம் சொன்னாள். என்னைப்பார்த்து அருகில் வந்தாள். நான் என்னை அவளிடம் அறிமுகம் செய்தேன்,எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.பின் அவளுக்கு என் வாழ்த்துதல்களை கூறினேன்,ஒரே வரியில் நன்றி என்றாள். சற்றும் யோசிக்காமல் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்,அவள் சற்று யோசித்து,என்ன விஷயம் என்றாள், சொல்கிறேன் என்றேன்.ஒரு மணி நேரம் கழித்து பேசலாமே என்றாள்,சரி என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தேன்.மனம் படப்படத்தது.சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவளை பார்க்க சென்றேன்,தயாராக இருந்தாள், காபி சாப்பிடலாமா என்றேன், ம்ம்ம்.. என்றாள்,உடனே அருகில் உள்ள எங்கள் கேன்டீனுக்கு அழைத்துச்சென்றேன். சற்று ஒதுங்கி அமர்ந்தோம். என்ன விஷயம் என்றாள், எப்படி பேச்சை தொடங்கலாம்,என்று நினைத்தப்படியே,முதலில் என்னை உன் அண்ணனாக நினைத்துக்கொள் என்றேன்.அதை கேட்டதும் அவள் கண் கலங்கியது.......


விரைவில் தொடரும்....

Wednesday, August 11, 2010

மனித உடம்பு எனும் அதிசயம்
நாம் எதைஎதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம் .ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம் தான்.

* உங்களின் பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..

* மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..

* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...

* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன..

* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க முடியும் ...

* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....

* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் ...

* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...

* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....

* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......

(அட உடனே விரலை மூக்கின் மேல் வைத்தால் எப்படி!!!)

Wednesday, August 4, 2010

வார்த்தை விளையாட்டு!!!

திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)கீழே படியுங்கள்அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லைஅவள் :நீ என்னை விரும்புகிறாயா ?அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்அவள் :என்னை திட்டுவாயா ?அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

.......
.......
.......


திருமணத்திற்குப் பின் :கீழிருந்து மேலே படியுங்கள்........