Friday, March 19, 2010

மாயாவதி!!!!!!

இரண்டு மூன்று நாட்களாக என் மனதை குடைந்து கொண்டிருக்கும் செய்தி மாயாவதிக்கு அளிக்கப்பட்ட காசு மாலை தான்.. முதல் நாள் இரண்டு கோடி ரூபாயை மாலையாக பின்னியும் , நேற்று பதினெட்டு லட்ச ரூபாயை மாலையாக பின்னியும் அவருக்கு அணிவித்துள்ளனர்.. அந்த மலையை தூக்க ஆறேழு பேர்!! மாயாவதி முகத்தில் தெரியும் பெருமிதத்தை பாருங்க இந்த புகை படத்தில் ... என்ன ஒரு சந்தோசம்!!





இந்த புகை படத்தை பார்த்து எப்படி ஒருவரால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடிக்றது என்று எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது.. மனிதர்களில் இப்படி ஒருவரா !!! இப்படி நினைத்து கொண்டிருக்கையில் பள்ளி காலத்தில் ஆசிரியர் கற்பித்த குறள் ஒன்று ஞாபகம் வந்தது.
அந்த அதிகாரத்தில் (கயமை) உள்ள குறள்கள் ஓவொன்றும் கயவர்களில் குணங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களை சாட்டயடி அடிக்கும் பொன் மொழிகள்..
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.


இந்த குறளுக்கு பொருள் யாதெனில் , எந்த ஒரு உயிரினங்களிலும், ஒரே உருவத்தை கொண்டு இருவகையான பண்புகளை கொண்ட நிலையை காணவே முடியாது. அனால் மனிதர்களில் மட்டும் தான் நல்லவர் கெட்டவர் என்று இரு வகையான குணங்களை கொண்ட நிலையை ஒரே உருவத்தில் காண முடியும்..


மாயாவதி போன்று தன்னை தியாகியாக காட்டி கொண்டு மக்களின் காசை மாலையாக போட்டு கொள்ளும் கயவர்கள் பலர் வருவர் என்று வள்ளுவன் அறிந்திருக்கிறான் போலும் .. மாயாவதியின் முகத்தில் இருக்கும் ஆனந்த சிரிப்பையும், தன் சமூகம் உயர ஏதேனும் வழி இவர் செய்ய மாட்டாரா என்று ஏக்கத்தோடு இவர் முன்னால் கை வீசி கொண்டிருக்கும் மக்கள் கூடத்தின் நிலையை பார்க்கும் போது இந்த குறள் எனக்கு மிகவும் பொருத்தாமாக தோன்றியது..


அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் சுயநல கயவர்கள் தான் என்ற போதிலும் மாயாவதி அவற்றின் உச்சமாகவே எனக்கு தென் படுகிறார்.. தனக்கு தானே சிலை. இன்று காசு மாலை..


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

புராணத்தில் வரும் தேவர்கள் தாங்கள் விரும்பியதை செய்பவர்களாகவே சித்தரிக்க படுகிறார்கள்.. அவர்களை போல் தான் கயவர்களும்.. நாளது கேட்டது அறியாமல், யார் சொல்லும் கேட்காமல்.. தீமையை செய்து கொண்டே இருப்பார்கள் என்கிறான் வள்ளுவன் இந்த குறள் மூலம் ..


அவரின் கட்சி வசூலிக்கும் நிதி எப்படி வருடாந்திரம் உயர்ந்திருக்கிறது என்பதை இந்த புகை படத்தில் நீங்க காணாலாம்..




இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பிற்படுத்த பட்ட மக்களின் வாழ்கை தரம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று கணக்கீடு எடுத்து பார்த்தல் இந்த வசூல் வளர்ச்சியின் ஒரு சதவீதமாவது இருக்குமா என்று எனக்கு சந்தேகமா தான் இருக்கிறது..








இன்னும் எத்தனை காலம் தான் இப்படி பட்ட கயவர்களை நம்பி நம் சமூகம் வாட போகிறதோ தெரியவில்லை ..

Thursday, March 11, 2010

பேரபாயம் காத்திருக்கிறது...!

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்தவை.....

எனக்கு பிடித்தவை.....

ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!!!

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்!!

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...!!

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க!மலரிடம் சொன்னது முள்...

கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்...
நீ எனனை அனணக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி!!!

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்க்ள்!!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னது!!!

Saturday, March 6, 2010

BUT NOW ????

BUT NOW???
School Life….
Big gang of friends…
Colorful uniforms….
Silly fights….
Friendly teachers…
Group photos….
Combined studies….
Never ending P.T periods….
Rocking annual days….
Group discussions on anything & nothing…..
So many hands in single lunch box…
Remarkable marks…
Terror report card, self parent’s signature….
Justified mistakes…
Lovable tours…..
“SCHOOL “ life is just like HEAVEN!!!!
BUT NOW ????