இரண்டு மூன்று நாட்களாக என் மனதை குடைந்து கொண்டிருக்கும் செய்தி மாயாவதிக்கு அளிக்கப்பட்ட காசு மாலை தான்.. முதல் நாள் இரண்டு கோடி ரூபாயை மாலையாக பின்னியும் , நேற்று பதினெட்டு லட்ச ரூபாயை மாலையாக பின்னியும் அவருக்கு அணிவித்துள்ளனர்.. அந்த மலையை தூக்க ஆறேழு பேர்!! மாயாவதி முகத்தில் தெரியும் பெருமிதத்தை பாருங்க இந்த புகை படத்தில் ... என்ன ஒரு சந்தோசம்!!
இந்த புகை படத்தை பார்த்து எப்படி ஒருவரால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடிக்றது என்று எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது.. மனிதர்களில் இப்படி ஒருவரா !!! இப்படி நினைத்து கொண்டிருக்கையில் பள்ளி காலத்தில் ஆசிரியர் கற்பித்த குறள் ஒன்று ஞாபகம் வந்தது.
அந்த அதிகாரத்தில் (கயமை) உள்ள குறள்கள் ஓவொன்றும் கயவர்களில் குணங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களை சாட்டயடி அடிக்கும் பொன் மொழிகள்..
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
இந்த குறளுக்கு பொருள் யாதெனில் , எந்த ஒரு உயிரினங்களிலும், ஒரே உருவத்தை கொண்டு இருவகையான பண்புகளை கொண்ட நிலையை காணவே முடியாது. அனால் மனிதர்களில் மட்டும் தான் நல்லவர் கெட்டவர் என்று இரு வகையான குணங்களை கொண்ட நிலையை ஒரே உருவத்தில் காண முடியும்..
மாயாவதி போன்று தன்னை தியாகியாக காட்டி கொண்டு மக்களின் காசை மாலையாக போட்டு கொள்ளும் கயவர்கள் பலர் வருவர் என்று வள்ளுவன் அறிந்திருக்கிறான் போலும் .. மாயாவதியின் முகத்தில் இருக்கும் ஆனந்த சிரிப்பையும், தன் சமூகம் உயர ஏதேனும் வழி இவர் செய்ய மாட்டாரா என்று ஏக்கத்தோடு இவர் முன்னால் கை வீசி கொண்டிருக்கும் மக்கள் கூடத்தின் நிலையை பார்க்கும் போது இந்த குறள் எனக்கு மிகவும் பொருத்தாமாக தோன்றியது..
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் சுயநல கயவர்கள் தான் என்ற போதிலும் மாயாவதி அவற்றின் உச்சமாகவே எனக்கு தென் படுகிறார்.. தனக்கு தானே சிலை. இன்று காசு மாலை..
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
புராணத்தில் வரும் தேவர்கள் தாங்கள் விரும்பியதை செய்பவர்களாகவே சித்தரிக்க படுகிறார்கள்.. அவர்களை போல் தான் கயவர்களும்.. நாளது கேட்டது அறியாமல், யார் சொல்லும் கேட்காமல்.. தீமையை செய்து கொண்டே இருப்பார்கள் என்கிறான் வள்ளுவன் இந்த குறள் மூலம் ..
அவரின் கட்சி வசூலிக்கும் நிதி எப்படி வருடாந்திரம் உயர்ந்திருக்கிறது என்பதை இந்த புகை படத்தில் நீங்க காணாலாம்..
இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பிற்படுத்த பட்ட மக்களின் வாழ்கை தரம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று கணக்கீடு எடுத்து பார்த்தல் இந்த வசூல் வளர்ச்சியின் ஒரு சதவீதமாவது இருக்குமா என்று எனக்கு சந்தேகமா தான் இருக்கிறது..
இன்னும் எத்தனை காலம் தான் இப்படி பட்ட கயவர்களை நம்பி நம் சமூகம் வாட போகிறதோ தெரியவில்லை ..
4 comments:
Myself attached some pictures in this article, but not visible why??
Please tell me how to attach?
Free Customer Care Service Call 9994083490. You can clear your doubts. Please remove CAPTACHA link from your blog while giving comments.Thanks.
நல்லப் பதிவு.
படங்கள் சரியாக இடம்பெற்று இருந்தால்
மிக சிறப்பாக இருக்கும்.
//படங்கள் சரியாக இடம்பெற்று இருந்தால்
மிக சிறப்பாக இருக்கும்.//
மிக்க நன்றி!!!
அடுத்த பதிவு படத்துடன் வரும்!!!
Post a Comment