Tuesday, May 18, 2010

எம் இனத்துக்கு ஏன் இந்த நிலை

உலகில் நாமும் ஓர் இனமடா


எம் இனத்துக்கு ஏன் இந்த அவதியடா

சொந்த மண்ணில் ஓர்

இனமாக வாழ விரும்பினோமடா

விரும்பியதால் நீ தந்த பரிசு இதுவாடா



மாற்றான் மண்ணை கேட்கவில்லை நாம் வாழ

எம் தாய் நிலத்தைத் தான் கேட்டோமடா

தாய் நிலத்தை கேட்டதால்

கொத்து குண்டுகளால் எங்கள் உறவுகளை

கொன்று குவித்தாயடா



எம் தேசம் இருளில் மூழ்கி

ஓர் ஆண்டு ஓடோடி போனதடா

ஓராண்டு போயியும்

எம் பாச இல்லங்களின்

பரிதவித்த அழுகுறல் இன்றும் கேட்குதடா



தாயை இழந்தோர், தந்தையை இழந்தோர்

பிள்ளையை இழந்தோர், தாய் தந்தையை இழந்தோர்

அண்ணாவை இழந்தோர், அக்காவை இழந்தோர்

தம்பியை இழந்தோர்.



காலை இழந்தோர், கையை இழந்தோர்

கண்ணை இழந்தோர்

தன் வாழ்கையை இழந்தோர் - என்று

எம் உறவுகளை சிதைத்தாயடா



மாற்றான் உதவியோடு

தம் மண்ணில் வாழ்ந்த

ஓர் இனத்தை கலங்கடித்த

இனவெறி பிடித்த இனமடா உன் இனம்



உண்ண உணவு இன்றி

உடுத்திட உடை இன்றி

உறங்கிட இடம் இன்றி

குடித்திட நீர் இன்றி

உருகியதடா எம் இனம்

தள்ளாடும் வயதினில்

தனிமையில் நடக்க முடியாமல்

தவித்ததடா எம் முதியோர்



நடை பலகா வயதினில்

தவழ்ந்திடும் வயதில் தவித்ததடா

தாய் தந்தையை உன் குண்டுகளுக்கு பறிகொடுத்த

தன்னையே அறியாத பிஞ்சு மழலைகள்

பாதுகாப்பான இடமின்றி

பாதுகாப்புகாக பதுங்கிய பதுங்கு குழியை

புதைகுழியாக மாற்றினாயடா

உன் பல்குழல் குண்டுகளால்



ஓடினோம் ஓடினோம்

முள்ளிவாய்க்கால் வரை ஓடினோம்

முற்கள் கூட குத்தவில்லையடா

எம் உறவுகளின் நிலை கண்டு



ஆனால்

பல்குழல் குண்டு கொண்டு

கொன்று குவித்தாயடா

எம் பாச உள்ளங்களை

பொறுத்திரு பகையே

காலம் பதில் சொல்லும்

உன் கால்கள் இரண்டும் உடையும்

எம் தேசம் மலரும்



மாவீரர்களே

உங்கள் உயிரை எம் தேசத்தின் விடியலுக்காக

அர்ப்பணித்த எம் வீர மறவர்களே

ஒவ்வொரு தமிழனும் உங்களை மறப்பதில்லை

உங்களை மறக்காத ஒவ்வொரு தமிழனும்

உங்கள் நினைவுகளை நிஜமாம் வரை

போராடுவார்கள் - இது உறுதி


நன்றி : கவிஞர் உதயா

2 comments:

VijayaRaj J.P said...

\\ஒவ்வொரு தமிழனும் உங்களை மறப்பதில்லை //


உங்களை மறந்தவன் தமிழனில்லை.

அம்பிகா said...

\\உங்களை மறந்தவன் தமிழனில்லை.\\
:-(((