Tuesday, June 29, 2010

ரூபாய் 400 கோடி செலவில் நம் முதல்வர் உருவாக்கிய முக்கிய அறிவிப்புகள்:

01.தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க சட்டம்.

02.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் 'தமிழ்ச் செம்மொழி' அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம் பெறும்.

03.மத்தியில், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்

04.சென்னை ஐகோர்ட்டில்,தமிழை பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

05.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும்,குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்

06.இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்
(என்ன ஒரு நாடகம்!!!! தமிழ் இனத் தலைவா.....))

07.சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவருக்கு 'கண்யன் பூங்குன்றனர்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

08.கோவையில்,'செம்மொழிப் பூங்கா' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போககுவரத்து நெரிசலை போக்க ரூ.100 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

09.குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். (ஐயோ சாமி!!!)

மேலே கூறிய அனைத்து அறிவிப்புகளையும், ரூபாய்.400 கோடி செலவு செய்து கூற வேண்டிய அவசியம் இல்லை. இதை நம் முதல்வர் சென்னையில்,கோட்டையில் அல்லது சட்டசபையில் அறிவித்து இருக்கலாம்.

(அடுத்த வருடம் வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு,தன் விளம்பரத்துக்காக நடத்திய மாநாடு தான் இது)

இதை தட்டிக் கேட்க நம் நாட்டில் யாரும் இல்லை!!!

எதிர் கட்சி (அ.தி.மு.க) என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?(பாவம் அந்த அம்மையார் தோழியின் அடிமையாக இருந்துக்கொண்டு.எம்ஜியார் தொடங்கிய கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார்)

அது போல் கம்யூனீஸ்டு கட்சி, அவர்களின் கொள்கைகளை மறந்து விட்டு, என்ன செய்யலாம் என்று முழித்துக்கொண்டு இருக்கிறது.
மற்றப்படி அனைத்து கட்சிகளும், அவர்களுடைய சுய நலத்துக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அதனால் குழந்தை இல்லாத வீட்டில், கிழவன் தூள்ளி............ (முடித்துக்கொள்ளுங்கள்)

தமிழ் நாட்டு மக்கள் பாவம்......

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?????

சிந்தித்து பதில் சொல்லுங்கள்....

2 comments:

அம்பிகா said...

\\மேலே கூறிய அனைத்து அறிவிப்புகளையும், ரூபாய்.400 கோடி செலவு செய்து கூற வேண்டிய அவசியம் இல்லை. இதை நம் முதல்வர் சென்னையில்,கோட்டையில் அல்லது சட்டசபையில் அறிவித்து இருக்கலாம்.\\
தெரிய வேண்டியவங்களுக்கு தெரிய வில்லையே!

Unknown said...

உங்கள் கருத்து சரி ஆனால் மக்கள் யாரும் முன் வந்து இதை பற்றி கேட்கமாட்டார்கள், அப்படியே கேட்டாலும் எதாவது இலவசம் என அறிவித்து மக்களின் மனதை மாற்றி விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள்.

உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியை சொல்ல விரும்புகிறேன். உங்களின் எதிர்காலம் மற்றும் ஜாதக கணிப்பை பற்றி முழுமையாகவும் துல்லியமாகவும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல இணையத்தின் முகவரியை உங்களுக்கு தருகிறேன். மேலும் இங்கு ஜாமகோள் பற்றி புதியதாக ஒரு தமிழ் மென்பொருள் ஒன்றும் வந்துள்ளது. அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த இணையத்தை பாருங்கள். www.yourastrology.co.in