பதில் யார் சொல்வார் ???
கணவன்,மனைவி,இரண்டு பெண் குழந்தைகள்! வயது 14, 12!!! கணவன் தனியார் துறையில் வேலை, மனைவி தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை. குழந்தைகள் இரண்டும் படிப்பில் சுட்டி!! வாழ்க்கை நன்றாக சென்றது.
கணவன் வேலை பார்க்கும் துறையில்,மின்சார திருட்டு வழக்கில் பொய்யாக அவர் மேல் பழி விழுந்தது. அவரின் முதலாளி ரூபாய் 3300000/- இவர் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
மனம் உடைந்த இவர் தன் வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் அவர் கதையை கூறினார். என்ன முடிவு எடுக்கலாம் என்று யோசித்து, சற்றும் அறிவுக்கு இடம் கொடுக்காமல், வீட்டை அடைத்து விட்டு,வீட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்தை அனைவரும் குடித்தனர். மறு நாள் காலை பக்கத்து விட்டில் உள்ளவர்கள், வீட்டை உடைத்து உள்ளே சென்று, அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அந்த கொடுமை நடந்தது!! குழந்தைகள் இரண்டு பேரும் இறந்து விட்டனர், பெற்றோர் பிழைத்துக்கொண்டனர்
இப்போது இவர்களின் நிலைமை என்ன??ஒரு பக்கம் போலீசார் விசாரனை, மறு பக்கம் குழந்தைகளை இழந்த துக்கம்!!!
ஒரு நிமிடம் தங்கள் அறிவால் யோசிக்காமல் செய்த தப்பு,
இப்போது இவர்கள் வாழ்க்கை யார் கையில்???
எப்படி வாழ்வார்கள் இனிமேல்???
விடை எங்கே????
(ஒரு மாதத்திற்கு முன் தூத்துக்குடியில் நடந்த சம்பவம்)
5 comments:
பொன்ராஜ்!
நீயாகவே எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
சங்கடமாக இருக்கிரது பதிவைப் படிக்க....
அப்புறம்....
!!!!!
??????
இவைகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாமே.
திரு. மாதவராஜ் அவர்களுக்கு...
என்னையும் எழுத வைத்த உங்களுககு நன்றி!! நன்றி!!!
உருக்கமானப்பதிவு.
மனதை கவலை கொள்ள செய்தது
மிக துக்ககரமான நிகழ்வு.
மாதுஅண்ணன் கூறியதை நினைவில் கொள்ளவும்.
நிறைய எழுது ராஜ்.
படிக்கத்தான் நாங்க இருக்கோமே!
எழுத ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி!!!
Post a Comment