Thursday, August 26, 2010

என் கல்லூரி நாட்கள்....

நான் கல்லூரில் படிக்கும் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறலாம் என்று நினைத்துப்பார்த்தால்,அப்படி ஒன்றும் என் மனதில் தோன்றவில்லை.ஆனாலும் எழுத வேண்டும் என்று நினைத்துப்பார்த்தேன்,பல நினைவுகள் என் மனதில் வந்தது,அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் படித்தேன்.எனது மூன்றாம் ஆண்டு கல்வி படிப்பின் போது கல்லுரியின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன், அப்போது எங்கள் கல்லூரியில் இரு மாவட்டதையும் சேர்த்து(தூத்துக்குடி,நெல்லை) அனைத்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.மொத்தம் 50கல்லூரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடக்கும் ஒரு நாள் முன்பே எங்கள் கல்லூரிக்கு வந்து குவிந்தனர்,அவர்கள் தங்குவதற்கு மாணவப்பேரவை தலைவர் என்ற முறையில் எங்கள் குழு இடங்களை பிரித்து கொடுத்தோம்.முதல் நாள் போட்டிகள் மிகவும் ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் முடிந்தது,அன்று இரவு நான் மற்றும் நண்பர்கள் இரவு பத்து மணிக்கு மேல் ஒவ்வொரு கல்லூரி குழுவினரிடம் சென்று அவர்களின் வசதி மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான ஒத்திகையை பார்த்துக்கொண்டு வந்தோம்.அப்போது ஒரு அறை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தேன், அனால் உள்ளே ஒரே கூச்சலாகவும் ஒரு அழுகை சத்தமும் கேட்டது.என் நண்பர்களிடம் இது எந்த கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று கேட்டேன் அதற்கு அவர்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் பெயரை சொன்னார்கள். உடனே அங்கு இருந்து சென்று விட்டோம்.. ஒரு மணி நேரம் கழித்து நானும் என் நெருங்கிய நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்று கதவை தட்டினோம், கதவு திறக்கப்பட்டது அங்கு 12 மகளிர்கள் இருந்தனர்,அவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன் உடனே சத்தம் போடாதீங்க மெதுவாக பேசுங்கள் என்று ஒரு சேர சொன்னார்கள்,அதில் ஒருவர் மட்டும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த நான் யார் என்று கேட்டேன்,அதற்கு அவள் தான் கவிதா(உண்மையான பெயர் இது அல்ல) அவளை பார்த்த மறு வினாடி எனக்கு தூக்கி வாரிப் போட்டது,ஏன் என்றால் முதல் நாள் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவள் அவள்தான்.

என்ன விஷயம் என்று கேட்டேன், சுற்றிலும் மௌனம்!! சிறிது நேரம் கழித்து அவளுடைய தோழி பேசத்தொடங்கினாள். அவள் பெயர் கவிதா,சொந்த ஊர் திருப்பூர் அருகில் உள்ள கிராமம்,தந்தை தனியார் வங்கியில் உயர் பதவி,வீட்டில் அம்மா மற்றும் ஒரு தம்பி.தந்தை வேலை காரணமாக அடிக்கடி ஊர் மாறுவார். இவள் பள்ளிப் படிப்பு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில்.தன் படிப்பை விடுதியில் இருந்து தொடர்ந்தாள். நல்ல அழகு. கலை,படிப்பு மற்றும் விளையாட்டு அனைத்திலும் சுட்டி!! தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக,இரவில் கண் விழித்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சக தோழியிடம் இருந்து போதை ஊசிக்கு அடிமையானாள். அன்று தொடங்கிய பழக்கம் இன்று கல்லூரி வரை தொடர்கிறது.
அனைத்தையும் கேட்டறிந்தப்பின், மனக்கஷ்டதோடு இதைப்பற்றி நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றோம்.
மறு நாள் வழக்கம் போல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிந்தது. கவிதா எல்லா நிகழ்ச்சிகளையும் நன்றாக செய்து முடித்தாள்,அனைவரது பாராட்டையும் பெற்றாள். அனைவரது கண்களும் அவளையே சுற்றி வந்தது. அன்று மாலை அவளைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்து, அவள் அறைக்கு சென்றேன்.அங்கு இறுதி நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள். என்னைப்பாத்த அவளின் தோழி நான் வந்து இருப்பதை அவளிடம் சொன்னாள். என்னைப்பார்த்து அருகில் வந்தாள். நான் என்னை அவளிடம் அறிமுகம் செய்தேன்,எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.பின் அவளுக்கு என் வாழ்த்துதல்களை கூறினேன்,ஒரே வரியில் நன்றி என்றாள். சற்றும் யோசிக்காமல் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்,அவள் சற்று யோசித்து,என்ன விஷயம் என்றாள், சொல்கிறேன் என்றேன்.ஒரு மணி நேரம் கழித்து பேசலாமே என்றாள்,சரி என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தேன்.மனம் படப்படத்தது.சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவளை பார்க்க சென்றேன்,தயாராக இருந்தாள், காபி சாப்பிடலாமா என்றேன், ம்ம்ம்.. என்றாள்,உடனே அருகில் உள்ள எங்கள் கேன்டீனுக்கு அழைத்துச்சென்றேன். சற்று ஒதுங்கி அமர்ந்தோம். என்ன விஷயம் என்றாள், எப்படி பேச்சை தொடங்கலாம்,என்று நினைத்தப்படியே,முதலில் என்னை உன் அண்ணனாக நினைத்துக்கொள் என்றேன்.அதை கேட்டதும் அவள் கண் கலங்கியது.......


விரைவில் தொடரும்....

8 comments:

அம்பிகா said...

தொடர்பதிவு, தொடர்கதையாகிறதா?
குட்!

VijayaRaj J.P said...

"என் கல்லூரி நாட்கள்"என்ற
தலைப்பை பார்த்ததும் ஏதோ
ஜாலியாக இருக்கும் என்று
நினைத்தேன்...

ஆனால் மர்மங்களும்,திருப்பங்களும்
நிறைந்த தொடர்கதையாக
இருக்கிறதே!

KAVEESH M said...

Hmmmm... Nice... Waiting for second part......

Sriakila said...

//"என் கல்லூரி நாட்கள்"என்ற
தலைப்பை பார்த்ததும் ஏதோ
ஜாலியாக இருக்கும் என்று
நினைத்தேன்...

ஆனால் மர்மங்களும்,திருப்பங்களும்
நிறைந்த தொடர்கதையாக
இருக்கிறதே!//

எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. காத்திருக்கிறோம்.

Deepa said...

Very good...waiting for second part.

Deepa said...

Submit to Tamilmanam.

ponraj said...

நான் வெளி நாட்டில் பயணம் செய்து கொண்டு இருப்பதால், அடுத்த பகுதி சற்று தாமதம் ஆகிவிட்டது விரைவில் வெளி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// ponraj said...
நான் வெளி நாட்டில் பயணம் செய்து கொண்டு இருப்பதால், அடுத்த பகுதி சற்று தாமதம் ஆகிவிட்டது விரைவில் வெளி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

5:25:00 AM//

சீக்கிரம் வாங்க...
அடுத்த பகுதியைத் தாங்க...
காத்திருக்கிறோம் நாங்க...