ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படி போறீங்க?
என்ன கண்டுபிடிக்க போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
பதில் சொல்லுங்க ஏன்?
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா?
இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??......!
3 comments:
இந்த தொல்லை தாங்காமல்தான்
கொலம்பஸ் அமெரிக்காவை தேடி
புறப்பட்டு இருப்பார்.
அதுசரி, பொன்ராஜிக்கு புதிய
நாட்டை கண்டுபிடிக்கும் உத்தேசம்
உண்டோ?
நல்ல ஜாலியான பதிவு.
அப்போ, ஆணின் வெற்றிக்கு குறுக்கே தான் பெண் இருக்கிறாளா?
சரி... மரமண்டை .. யாரு?
///புதிய நாட்டை கண்டுபிடிக்கும் உத்தேசம்
உண்டோ?///
நான் ஏற்கனவே ஒரு அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டேன்!!
///அப்போ, ஆணின் வெற்றிக்கு குறுக்கே தான் பெண் இருக்கிறாளா?///
உண்மை!! சில சமயஙகளில்.....
///சரி... மரமண்டை .. யாரு?///
நான் அவன் இல்லை!!!
Post a Comment