Friday, April 16, 2010

தமிழக அரசியல் கட்சிகள்:

தமிழக அரசியல் கட்சிகள்:




தி.மு.க :

தலைவர் : இப்போது திரு.கருணாநிதி, அடுத்து யாரோ? (போட்டி)
 
 
 
பலவீனம்:


நாட்டுக்காக கட்சி அல்ல, தன் குடும்பத்திற்காக கட்சி!

நாட்டை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு, தன் வீட்டை நாட்டுக்கு கொடுத்தவர்.

"தமிழ் இனத் தலைவர்" என கூறிக் கொண்டு, சோனியாவின் பேச்சைக் கேட்டு ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்தவர் (பதவிக்காக).
இப்போது பணத்தால் மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்து சந்தோஷத்தில் இருப்பவர். (மக்கள் திருந்துவார்களா?)மின்சார வெட்டால் மக்கள் படும் அவதி.

பலம்:அரசு ஊழியர்கள்,ஒரு ரூபாய்ககு அரிசி,அவசர உதவி 108, காப்பீட்டுத்திட்டம்.,ஏழை திருமண உதவி.

காங்கிரஸ் :

பலவீனம் : எத்தனை கோஷ்டி என்று யாருக்கும் தெரியாது...!
தமிழரின் தோளில் (தமிழக அரசியல் கட்சி)ஏறிக்கொண்டு அரசியல் செய்வர்,ஆனால் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்வர்.
இத்தாலியப் பெண்ணை "அன்னை" என்று கூறுகின்றனர் (திரு.கருணாநிதிக்கும் அவர் "அன்னை") "அன்னை" என்ற சொல்லுக்கு வந்த அவமானம்!

பலம் : தேசியக் கட்சி, அன்றைய காலத்தில் உள்ள சுகந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் காமராஜரின் உண்மை தொண்டர்கள்.

அ.தி.மு.க

பலவீனம்: சகோதரிப் பாசம்,கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு,சகோதரியின் அறிவுரைப்படி அரசியல் பண்ணுதல்,ஆணவம்,அறிவுரை கூற ஆள் இல்லை,கேட்கவும் மதி இல்லை. பிறரை மதியாமை.

பலம் : எம்ஜியார், இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜியாரின் உண்மையான தொண்டர்கள்!!!

பா.ம.க.

பலவீனம்:: சந்தர்ப்பாவாத அரசியல் (சில சமயம் "அந்த அம்மையார்" என்பார், சில சமயம் "சகோதரி" என்பார்) சாகும் முன் எப்படியாவது முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை. சாதியை வைத்து அரசியல் நடத்துதல். பழைய தொழில் மரம் வெட்டுதல் (போராட்டம் என்ற பெயரில்)

பலம் : சாதி வெறிப்பிடித்த சில மக்கள்.

கம்யூனிஸ்ட் :

பலவீனம்: இப்போது அவர்கள் தங்கள் கொள்கையை மறந்து அரசியல் பண்ணுதல். முன்பு போல் மக்களுக்காக போராட்டம் நடத்தாமல், சுயநலத்துக்காக போராட்டம் நடத்துதல்

பலம் : இப்போது சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

ம.தி.மு.க

பலவீனம் : தன்மானம்,கொள்கை இரண்டையும் விட்டுவிட்டு அரசியல் பண்ணுதல். கட்சி தலைவரை காணவில்லை. பாவம் தொண்டர்கள்

பலம் : அப்படினா என்ன?

தே.மு.தி.க

பலவீனம்: சினிமாத்தனமான பேச்சு,தன் உறவினருக்கு மூக்கிய கட்சிப்பதவியை கொடுப்பது.

பலம்: தன் ரசிகர்கள்,யாருக்கும் ஓட்டு போட பிடிக்காமல், இவருக்கு ஓட்டு போடும் மக்கள்,கட்சி நிர்வாகிகளில் பலர் பணம் படைத்தவர்கள்.

இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன.... அதைப்பற்றி எழுத ஒன்றும் இல்லை.

தமிழக மக்களே சிந்திப்பீர்.....

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவைகள்.

பின் குறிப்பு: கட்சி அனுதாபிகள் யாரும் கோபம் கொள்ள வேண்டாம், குறிப்பாக கம்யூனிஸ்ட் தோழர்கள்!!

3 comments:

அம்பிகா said...

பலமும் பலவீனங்களும் நன்றாக இருந்தன.
தி.மு.க. அவ்வப் போது நடத்தும் பாராட்டுவிழாக்கள் பலமா ?
பலவீனமா?

ponraj said...

மறுக்கவே முடியாது. கண்டிப்பாக பலவீன்ம் தான்!!


(புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா அவசர கோலத்தில் நடந்து முடிந்தது,வெளி கட்டிட வேலை முடியவில்லை.(elevation) அதற்காக தோட்டாதரணியை வைத்து தற்காலிகமான தோற்றம் அமைப்பதற்கு செலவு ரூபாய் 21000000/-. இது யார் பணம்? மக்கள் பணம்!!. இதை யார் கேட்டார்கள்.)

VijayaRaj J.P said...

\\நாட்டை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு, தன் வீட்டை நாட்டுக்கு கொடுத்தவர்.// நல்லாருக்கு பொன்ராஜ்.