
அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள் குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாககக் கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்பு தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .
தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க வாழ்க பல்லாண்டு ...! கடைசித் தமிழனை அழிக்கும் வரை...!!!
நன்றி: இரா. ரவி
3 comments:
வணக்கம்,
"தக்கன வாழும். தகாதன அழியும்" [ "Survival of the fittest"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.
http://makkalthalapathi.blogspot.com/2010/07/blog-post_09.html
கலைஞர் மத்திய அரசுக்கு
தொடர்ந்து கடிதம் எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் தபால் நிலையங்களை
மூடவேண்டிய நிலை ஏற்படும்!
நல்ல பகிர்வு ராஜ்
Post a Comment